Thursday, June 9, 2016

ரமலான் மாதம்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ


ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்போம் 
இது அல்லாஹ்வின் உத்தரவு.
فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ
இதில் விதிவிலக்கு சிலருக்கு மட்டுமே
·         நோன்பு வைக்க அறவே இயலாத முதியவர்கள், நோயாளிகள் – இத்தகையோரில் வசதியுள்ளவர்கள் பித்யா கொடுக்க வேண்டும்.
·         அசுத்த நிலையிலிருக்கிற அல்லது கர்ப்பிணிப் பெண்கள், அல்லது பால் கொடுக்கும் பெண்கள் – இவர்கள் நோன்பை கழா செய்ய வேண்டும்.
·         பயணிகள் – இவர்களும் பின்னர் நோன்பை கழா செய்ய வேண்டும்

மற்ற எவரும் நோன்பை விட அனுமதியில்லை.

மறந்து விடவேண்டாம் இது அல்லாஹ்வின் உத்தரவு

فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ

சிரமத்தின் காரணமாக நோன்பை தற்காலிகமாக விட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டவர்கள் கூட (தடுக்கப்பட்டவர்களை தவிர)  நோன்பு நோற்றுக் கொண்டால் அது நன்மையானதேஎன்கிறான் அல்லாஹ்

وَأَن تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
நோன்பு வைத்தால் கிடைக்கும் நன்மை

قال صلى الله عليه وسلم :  من صام رمضان إيماناً واحتساباً غفر له ما تقدم من ذنبه }البخاري ومسلم

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَّدَ اللَّهُ وَجْهَهُ عَنْ النَّارِ سَبْعِينَ خَرِيفًا-  بخاري2628
خَرِيفًا : عاما

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مَعَهُمْ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَدْخُلُونَ مِنْهُ فَإِذَا دَخَلَ آخِرُهُمْ أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ – مسلم - 1974

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ فِي الدُّنْيَا عِنْدَ إِفْطَارِهِ وَفَرْحَةٌ فِي الْآخِرَةِ-  احمد


     நோன்பின் பரிந்துரை
·         عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ فَيُشَفَّعَانِ  احمد

நோன்பின் மகத்துவம் –
ஷஹாதத்தை கோரிய தோழருக்கு மாற்றாக பெருமானார்சொன்ன அறிவுரை நோன்பு

عَنْ أَبِي أُمَامَةَ قَالَ أَنْشَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوًا فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ لِي بِالشَّهَادَةِ فَقَالَ اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا فَسَلِمْنَا وَغَنِمْنَا قَالَ ثُمَّ أَنْشَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوًا ثَانِيًا فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ لِي بِالشَّهَادَةِ قَالَ اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا فَسَلِمْنَا وَغَنِمْنَا قَالَ ثُمَّ أَنْشَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوًا ثَالِثًا فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَتَيْتُكَ تَتْرَى مَرَّتَيْنِ أَسْأَلُكَ أَنْ تَدْعُوَ اللَّهَ لِي بِالشَّهَادَةِ فَقُلْتَ اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ يَا رَسُولَ اللَّهِ فَادْعُ اللَّهَ لِي بِالشَّهَادَةِ فَقَالَ اللَّهُمَّ سَلِّمْهُمْ وَغَنِّمْهُمْ قَالَ فَغَزَوْنَا فَسَلِمْنَا وَغَنِمْنَا ثُمَّ أَتَيْتُهُ بَعْدَ ذَلِكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِعَمَلٍ آخُذُهُ عَنْكَ يَنْفَعُنِي اللَّهُ بِهِ قَالَ عَلَيْكَ بِالصَّوْمِ فَإِنَّهُ لَا مِثْلَ لَهُ قَالَ فَكَانَ أَبُو أُمَامَةَ وَامْرَأَتُهُ وَخَادِمُهُ لَا يُلْفَوْنَ إِلَّا صِيَامًا فَإِذَا رَأَوْا نَارًا أَوْ دُخَانًا بِالنَّهَارِ فِي مَنْزِلِهِمْ عَرَفُوا أَنَّهُمْ اعْتَرَاهُمْ ضَيْفٌ قَالَ ثُمَّ أَتَيْتُهُ بَعْدُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ قَدْ أَمَرْتَنِي بِأَمْرٍ وَأَرْجُو أَنْ يَكُونَ اللَّهُ عَزَّ وَجَلَّ قَدْ نَفَعَنِي بِهِ فَمُرْنِي بِأَمْرٍ آخَرَ يَنْفَعُنِي اللَّهُ بِهِ قَالَ اعْلَمْ أَنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلَّا رَفَعَ اللَّهُ لَكَ بِهَا دَرَجَةً أَوْ حَطَّ أَوْ قَالَ وَحَطَّ شَكَّ مَهْدِيٌّ عَنْكَ بِهَا خَطِيئَةً احمد 21171

நோன்பு குறித்து இன்னொரு ஹதீஸ் மிகப் பிரபலமானது.
இது தான் நாம் இன்றைய கவனத்திற்கு எடுத்துக் கொள்ளும் செய்தி,
நோன்பு எனக்குரியது என்கிறான் அல்லாஹ்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعمِائَة ضِعْفٍ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ يَدَعُ شَهْوَتَهُ وَطَعَامَهُ مِنْ أَجْلِي لِلصَّائِمِ فَرْحَتَانِ فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ وَلَخُلُوفُ فِيهِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ مشلم -1945
عَنْ أَبِي سَعِيدٍ عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ فَيْحِ الْمِسْكِ قَالَ صَامَ هَذَا مِنْ أَجْلِي وَتَرَكَ شَهْوَتَهُ عَنْ الطَّعَامِ وَالشَّرَابِ مِنْ أَجْلِي فَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ-  احمد
எல்லா வணக்கங்களும் அல்லாஹ்விற்குரியவை என்றாலும். நோன்பின் போது மனிதன் இரகசிய சந்தர்பத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை இழைபிசகாது கடைபிடிக்கிறான்.
·         தனிமையில் இறை உத்தரவை மீறுவதில்லை
·         ஆத்திரத்தில் உணர்ச்சி மேலீட்டில் இறையுத்தரவை மீறுவதில்லை.
·         எந்த அதிகப்படியான இன்பத்திற்காகவும் இறையுத்தரவை மீறுவதில்லை.
இந்த மூன்று சந்தர்ப்பங்களும் மனிதனை தடுமாறச் செய்யும் சந்தர்ப்பங்களாகும். இம்மூன்று சந்தர்ப்பங்களிலும் நோன்பு நோற்கிற முஃமினான ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் இந்த இரக்சியக் காப்பு உறுதியை கடைபிடிக்கிறார்கள்.
மிகவும் சிரத்தையோடு! காரல் எச்சியை விழுங்குவதில்லை. பேஸ்டின் சுவையை விழுங்குவதில்லை.
அல்லாஹ்வுக்காக ஒரு சமூகம் கட்டுப்பாடு காக்கிற மகத்துவம் நோன்பில் வெளிப்படுவது போல மற்ற எதிலும் இல்லை.
இன்னொன்று ஒருவர் உண்மையில் நோன்பாளியா என்பதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.
எனவே தான் அல்லாஹ் நோன்பை தன்னோடு இணைத்து நோன்பு எனக்குரியது என்கிறான்,
நோன்பு ஒரு இரக்சிய வணக்கம் என்றால் நோன்பிற்கு ஒரு இரக்சியம் இருக்கிறது.
அதுவே அல்லாஹ்வின் நினைவு.
நோன்பாளியாக இருக்கிற மனிதன் நோன்பின் ஒவ்வொரு நிமிடத்திலும் அல்லாஹ்வின் நினைவில் இருக்கிறான்.
அந்த நினைவு தான் தனிமையிலும் கோபத்திலும் இலாபத்திற்காகவும் நோன்பை துறக்காமல் காக்கிறது.
அரசியல் வாதிகளின் உண்ணாவிரதப் பந்தலுக்குப் பின்னே உணவுக் கூடங்கள் செயல்படுகின்றன,
அவர்கள் அருந்தும் குளிர்பானங்களில் விட்டமின் சத்து கலவைகள் கலக்கப்படுகின்றன,
இத்தகைய எந்த குறுக்கு வட்டுச் சிந்தனைகளும் நடைமுறைகளும் இல்லாமல் முஸ்லிம்களின் நோன்பு பாதுகாப்பாக இருக்கிறது.
காரணம் . எங்கும் எப்போதும் அல்லாஹ் இருக்கிறான் என்ற சிந்தனையே!
இதுவே நோன்பின் உண்மையான இரக்சியம்,
அல்லாஹ் எங்கும் எப்போதும் நம்மோடு இருக்கிறான் என்ற சிந்தனையை விழிப்புணர்வோடு உணர்வுப் பூர்வமாக நமது இதயம்  பெற்றுக் கொள்வோமானால் அது வே இறைநேசத்தின் உன்னத நிலையாகும்.
தவ்ரு குகையில் எதிரிகள் கண் முன் தோன்றிய உயிர் அச்சத்திலிருந்த நிலையில்
ما ظنك  يا أبا بكر بإثنين والله ثالثهما
என்று கூற அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு தோன்றியது அல்லாஹ்வைப் பற்றிய் திக்ரின் விழிப்பு நிலையாகும்.
இந்த நிலையில் வாழ்கிற மனிதர்கள் வாழ்வின் மிக உன்னதமான அந்தஸ்தை பெறுவார்கள். அவர்களது ஒவ்வொரு அசைவையும் அல்லாஹ் பிறகால சந்ததியினருக்கு பாடமாக வைப்பான்.
இறைத் தூதர் இபுறாகீம் அலை அவர்கள் ஹாஜரா அம்மையாரையும் அவரது அன்பு மகன் இஸ்மாயீல் அலை அவர்களையும் மக்காவின் பாலை வனப் பிரதேசத்தில் இறக்கி விட்டு புறப்பட்டார்கள். அவர்கள் இறங்கவில்லை.
ஒரு பையில் பேரீத்தம் பழமும் ஒரு தோல் பை நிறைய தண்ணீரும் கொடுத்தார்கள்.
ஹாஜரா அம்மையாரின் வயது 20
ஒன்றும் பேசாமல் கீழே இறக்கி விட்டுப் புறப்படுகிற கணவரின் வாகனத்திற்கு முன்னே சென்று    أبهذا أمرت  என்று கேட்டார். ஆம் என்று இபுறாகீம் (அலை) தலை அசைக்கவே அவருக்கு வழியை விட்டு விலகி திரும்பிச் சென்றார்.
அந்தப் பாலைவனப் பொட்டல் வெளியில் பச்சைக் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு தனியேயிருக்க ஹாஜரா அம்மா தயாரானார் என்றால் அல்லாஹ் வைப் பற்றிய எத்தகைய அழுத்தமான சிந்தனை அவருக்கு இருந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
قال ابن عباس (جاء بها إبراهيم وبابنها إسماعيل وهي ترضعه حتى وضعهما عند البيت عند دوحة فوق زمزم في أعلى المسجد وليس بمكة يومئذ أحد وليس بها ماء فوضعهما هنالك ووضع عندهما جرابا فيه تمر وسقاء فيه ماء ثم قفى إبراهيم منطلقا فتبعته أم إسماعيل فقالت يا إبراهيم أين تذهب وتتركنا بهذا الوادي الذي ليس فيه إنس ولا شيء فقالت له ذلك مرارا وجعل لا يلتفت إليها فقالت له أالله الذي أمرك بهذا قال نعم قالت إذن لا يضيعنا ثم رجعت فانطلق إبراهيم
இத்தகைய அழுத்தமான இறைச் சிந்தனையின்காரணமாகத்தான் மூன்று நாட்களுக்குப் பிறகு தண்ணீரைத் தேடிஅவர் ஓடிய ஓட்டத்தை மனித குலத்தின் ஒரு வணக்கமாகஅல்லாஹ் ஆக்கினான்.
ஸஃயு ஹஜ்ஜின் பிரதான கடமைகளில் ஒன்றாகும்ஷாபிமத்ஹபில் அது ருக்னுகளில் ஒன்று.
இங்கே இன்னொன்றும் கவனிக்கத்தக்கது,
ஹாஜரா அம்மையார் ஓடியது உக்ரவிய்யான மறுமைக் காரணத்திற்காக அல்ல. அல்லாஹை வணங்கும் வழியாக அல்ல.
தண்ணீரைத் தேடி ஓடினார்.
ஒரு துனய்விய்யான காரணத்திற்காக அவர் செய்த காரியத்தை அவர் அல்லாஹ்வை உரிய முறையில் நினைப்பவராக (தாகிரத்) ஆக இருந்ததால் அவருடைய துன்யவிய்யான நடவடிக்கையை உக்ரவிய்யுக்கான அந்தஸ்தை அல்லாஹ் வழங்கினான்.
மற்ற மனிதர்களின் வணக்கமாக – உக்ரவிய்யான நடவடிக்கையாக ஆக்கினான்.
இதே போலவே ஆதம் அலை அவர்களும் ஹவ்வா அம்மையாரும் சொர்க்கத்திலிருந்து இறக்கப்பட்ட போது வெவ்வேறு இடத்தில் இறக்கப்பட்டார்கள், ஆதம் அலை இந்தியாவிலும் ஹவ்வா அம்மா ஜித்தாவிலும் இறக்கப்பட்டார்கள்.
இரண்டு மலக்குகள் இவ்விருவரையும் சொர்க்கத்திலிருந்து அழைத்து வந்ததாக முஜாஹித் கூறுகிறார்.
ஆதம் அலை ஹவ்வா அம்மாவை தேடி இறுதியில் அரபாவில் கண்டு கொண்டார்,
கண்டு கொண்ட நேரம் துல் ஹஜ் 9 ம் நாள் மதியம்.
கணவன் மனைவியை கண்டு கொண்ட நேரத்தை ஹஜ்ஜின் பிரதான வணக்கமாக மக்களுக்கு அல்லாஹ் கடமையாக்கினான்.
ஹஜ்ஜின் பிரதான் நாள் துல் ஹஜ் 9 . பிரதான நேரம் மதியத்திற்கு பிந்தைய நேரமாகும்.
ஒரு கண்வன் மனைவி சந்தித்து தாம்பத்தியத்தில் இறங்கிய நேரத்தை வணக்கமாக இறைவன் அங்கீகரிக்க காரணம்,
அவ்விருவரும் அல்லாஹ்வை நினைப்பவர்களாக இருந்தார்கள், ரப்பனா ழலம்னாவின் பிரார்த்தனையில் இருந்தார்கள் என்பதாகும்.
அல்லாஹ்வை தவிர வேறு எந்தச் சிந்தனையும் அவர்களுக்கு இருக்க வில்லை.
அதே போல் இன்றை தவாபு நடைமுறைக்கு காரணம் இபுறாகீம் அலை,
தவாபு செய்து அவர் நடந்த கால் பாதத்தை கல்லில் பதிவு செய்த இறைவன், அந்த கல்லை மக்கள் தவாபை முடித்து விட்டு தொழுகைக்கு முன்னோக்கும் திசையாக அல்லாஹ் ஆக்கினான். அப்போது தான் மக்களின் தவாபு நிறைவடைகிறது.
அல்லாஹ்வை தங்கள் நினைவில் விழிப்புணர்வோடு நிலை நிறுத்தியவர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்து இது.
நோன்பு அல்லாஹ்வின் நினைவை நமக்குள் மலரச் செய்கிறது. அதை இன்னும் விழிப்புணர்வோடு எப்போது ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம் என்றால்
அந்த நினைவு நம்மையும் புனிதப்படுத்து.
அத்தை தான் அல்லாஹ் சொல்கிறான்.
لعلكم تتقون
கவனம் , நீங்கள் முத்தகீ ஆவீர்கள் என்றல்ல ஆகக் கூடும் என்கிறான் அல்லாஹ்.
அப்படி ஆவது நோன்பின் இரக்சியத்தை நாம் முழுமையாக புரிந்து கொண்டு நடப்பதில் இருக்கிறது.
அல்லாஹ் தவ்பீக செய்வானாக!


புனிதம் மிக்க ரமலான் இன்னும் சில நாட்களில் பிறக்க இருக்கிறது, அல்லாஹ்வுடைய அருளையும் கருணையையும் அதிகமதிகமாக கொண்டு வரப்போகிறது.
ரமலான் என்று நினைத்தாலே நமக்கு மகிழ்ச்சிதான்.
عن عبادة بن الصامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم  أتاكم رمضان شهر بركة يغشاكم الله فيه فينزل الرحمة ويحط الخطايا ويستجيب فيه الدعاء وينظر الله تعالى الى تنافسكم ويباهي بكم ملائكته فأروا الله تعالى من أنفسكم خيرا فإن الشقي من حرم فيه رحمة الله عزوجل . رواه الطبراني في الكبير
நம்மை படைத்த ரப்பு நமக்கு கணக்கற்ற நிஃமத்களை வழங்கியிருக்கிறான்,
·        படைத்தான்.
·        உணவளிக்கிறான்
·        இடமளித்திருக்கிறான்
·        வாழ்க்கைக்கு தேவையான வசதிகளைகொடுத்தான், 
 
அல்லாஹ் கொடுத்தது சுத்தமான தண்ணீரையும், சுத்தமான காற்றையும் தான்,  வீடு! வியாபாரம். தொழில் 
·        வாழ்க்கையை சுகமாக்கி கொள்ளும் ஏற்பாடுகளையும் தந்திருக்கிறான். 
ஏசி – விமானம் – 
·        வாழ்க்கையின் இன்பங்களை தங்கு தடையின்றி அனுபவிப்பதற்கேற்ற ஆரோக்கியத்தை வழங்கியிருக்கிறான்.

நம்மைச் சுற்றி உடல் நலமில்லாதவர்கள் எப்படி எல்லாம் சிரமப்படுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தால் நமக்கு கிடைத்துள்ள மகத்தான அருளின் மரியாதை புரியும்.
·         
ஒற்றை தலைவலியில் அவஸ்தை படுகிறவர்கள்
·         
கேன்சர் – கேன்சர் நோய் வந்தவர்களின் மரணம் அந்த கேன்ஸராலேயே ஏற்படும்.
·         
இதயம் – கிட்னி நோயுக்கு ஆளானவர்கள்
·        உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவர்கள்
ஒரு ஆலிம் வீட்டுக்கு மருத்துவர் ஒருவர் விருந்தாளியாக வந்துள்ளார். அவரை உபசரித்து உணவளித்து ஒரு அறையை தயார் செய்து அதில் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு சொன்னார் அந்த ஆலிம். அங்கிருந்த இருக்கைகளில் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு ஆலிம் எழுந்து உறங்குவதற்காக தன் அறைக்குச் சென்றார். காலையில் டாக்டர் தங்கியிருந்த அறைக் கதவை திறந்தவருக்கு ஆச்சரியம். டாக்டர் உட்கார்ந்த படியே உறங்கிக் கொண்டிருந்தார்.
ஆலிம் காரணம் விசாரித்தார்.
மருத்துவர் சொன்னார் : எட்டு வருடமாக நான் இப்படித்தான் தூங்கிக் கொண்டிருக்கிறேன். நாம் சாப்பிடுகிற உணவு உண்வுக்குழாய் வழியே கீழே இறங்கி வயிற்ற்குக்குள் செல்கிறது. சாப்பிட்டு விட்டு நாம் உடலை சாய்த்தால் உணவு அந்த வழியே திரும்பி விடாதவாறு கட்டுப்படுத்த ஒரு வால்வு இருக்கிறது. அந்த “வால்வுக்கு நான் ரிடர்ன் வால்வு என்று பெயர்’ எனக்கு அந்த வால்வில் ஓட்டை விழுந்து விட்டது. எனவே நான் சாப்பிட்ட உணவு திரும்ப வாய்வழியாக வெளியே வந்து விடும். எனவே படுக்கையில் படுத்து என்னால் உறங்க முடியாது .
அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற நிஃமத்தை எப்படி கணக்கிடுவது.
وإن تعدوا نعمة ت الله لا تعصوها

இவ்வளவு நிஃமத்துக்களை வழங்கிய இறைவன் நாம் அவனது உத்தரவுகளுக்கு கட்டுப்படுகிறோமா என்பதை பல வகைகளில் பரிசோதிக்கிறான்.
அந்த வகையில் ஒன்று தான் ரமலான்.
மனிதனுக்கு எந்த நிமிடமும் உணவளிக்கிற இறைவன், தன் கட்டளைப்படி சிறிது நேரம் சாப்பிடுவதை மனிதன் நிறுத்திக் கொள்கிறானா என்பதை சோதிக்கவே நோன்பை கடமையாக்கினான் என்கின்றனர் மாக்க அறிஞர்கள்.
நிஃமத்துக்களை அனுபவிக்கிற நாம் அந்த நிஃமத்துக்களை வழங்கியனுக்கு கட்டுப்பட்டு நடப்பதற்கு – அப்படி நடக்கிறோம் என்பதை அல்லாஹ்வுக்கு காட்டுவதற்கு அற்புதமான மாதம் ரமலான்,
இதைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் மேலே கூறப்பட்ட ஹதீஸில் அறிவுறுத்தினார்கள்.
فأروا الله تعالى من أنفسكم خيرا
இது ரமலான்,
அல்லாஹ்வின் அளப்பெரும் அருட்கொடைகளுக்கான மாதம்என்று உணர்ந்து அமல்களில் துடிப்போடும் ஆர்வத்தோடும்ஈடுபடுங்கள்!
அல்லாஹ் மலக்குகளிடம் நம்மைக் குறித்து பெருமிதம்கொள்கிறான்,
ويباهي بكم ملائكته

அல்லாஹ் நமக்கு வழங்கிய நிஃமத்துக்களை உணர்ந்து அதற்கு நன்றி செலுத்துகிறவர்களாக நாம் வாழ வேண்டும்.
நாம் சாப்பிட்ட பிறகு ஒரு முறை அல்ஹம்து லில்லாஹ் சொல்கிறோம்.
நமது கடமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்த் ஒரு பெருந்தை ஒரு முறை உணவு உண்ணும் போது 32 முறை அல்ஹ்மது லில்லாஹ் சொன்னாராம்.
அல்ஹ்மதுலில்லாஹ் என அதிகமாக சொல்கிற அவருடை வழக்கத்தை பார்த்து அவர் உணவரும் போது எத்தனை முறை அல்ஹம்து லில்லாஹ் சொல்கிறார் என்பதை அவருடன் இருந்தவர் கண்க்கிட்டு கவனித்திருக்கிறார், அப்போது இந்த எண்ணிக்கை தெரிந்திருக்கிறது,
ஒவ்வொரு பருக்கைக்கும் அல்ஹம்துலில்லாஹ் சொல்ல நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் நிஃம்த்துக்களை உணர்ந்து நான் நன்றி செலுத்துபவராக இருந்தால் அல்லாஹ் மேலும் நிஃமத்துக்களை அதிகப்படுத்துகிறான்,
لئن شكرتم لآزيدنكم
ஒருபெரியவர் அல்லாஹ் தனக்கு வழங்கியஅருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த முடியாமல்போய்விடுமோ என பயந்து “ யா அல்லாஹ் போதும் போதும்!என்று பிரார்த்தனை செய்தார்ஆனால் அவருக்கும் மேலும்மேலும் அதிகமாக நிஃமத் கிடைத்துக் கொண்டிருந்ததுதன்னைஅல்லாஹ் பொருந்திக் கொள்ள வில்லையோ என நினைத்துகவலையோடு அழுது பிரார்த்தனை செய்தார்அவருடைகனவில் ஒரு செய்தி சொல்லப்பட்டதுநீங்கள் போதும் போதும்என்று சொன்னது அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்என்று சொன்னதாகவே அர்த்தம்எனவே அல்லாஹ் உங்களுக்குமேலும் அதிகமாக தருகிறான்கவலை வேண்டாம்.

அல்லாஹ் வழங்கிய நிஃமத்துக்களுக்கு நன்றி செலுத்த தவறினால் அந்த நிஃமத்துக்களை பறிகொடுத்த நாம் தயாராகி விட்டோம் என்று பெருள் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுவதுண்டு.


إذا لم تشكر تعرضت للزوال
فإن شكرت قيد تها بإقلال
நீ நன்றி செலுத்தி விட்டால் சங்கிலி கொண்டு அதை கட்டிப்போட்டு விட்டாய்!
எனவே இந்த புனித ரமலானில் கால மெல்லாம் அருட் செய்யும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவனக்கு முடிந்த வரை யில் நன்றி செலுத்துவோம்.
நோன்பை சரியாகவும் சிறப்பாகவும் கடைபிடிப்போம், குடும்பத்தில் உள்ளோரை நண்பர்களை நோன்பை கடைபிடிக்க உற்சாகப்படுத்துவோம்.
நோன்பு அல்லாஹ்வை அடைந்து கொள்ளும் ஷார்ட் ரூட் !
الصوم لي ، وأنا اجزي به
நானே கூலி கொடுக்கிறேன் என்பதன் பொருள் நானே நேரடியாக கொடுக்கிறேன் என்பதாகும்
வ அன உஜ்ஸா என்றும் அறிவிப்பாளர்கள் படிப்பதுண்டு, அப்படியானால் நானே கூலி ஆவேன் என்று பெருள் வரும்.
நற்செயல்களுக்கான கூலியைப் பற்றி சொல்கிற போது திருக்குர் ஆன் பல இடத்திலும்
وَيُدْخِلْكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ
என்று சொல்கிறது,
மற்ற வணக்கங்களில் ஜன்னத் கிடைக்கிறது,
நோன்பில் ஜன்னத்திற்கு சொந்தக் காரனான ரப்பு கிடைக்கிறான்,
அதனால் தான் நபிமார்கள் நோன்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள்
·        ஆதம் அலை மாதந்தோறும் 13, 14, 15 ஆகிய நாட்களில் நோன்பை கடைபிடித்தார்கள்
·        நூஹ் அலை பெரும்பாலும் நோன்பாளியாக இருந்தார்கள்
·        தாவுத் அலை ஒரு நாள் விட்டு மறுநாள் நோன்பு வைப்பவராக இருந்தார்கள்
·        ஈஸா அலை மூன்று நாளைக்கு ஒரு நாள் நோன்று வைப்பவராக இருந்தார்கள்.
நோன்பு அல்லாஹ்வை அடை சிறந்த வழி என்பதே இதற்கு காரணம்.
மஹ்மூது அல் கஜ்னவி – கஜ்னீ முஹம்மது – ஒரு முறை தனது அமைச்சர்களுக்கு விலை உயர்ந்த கற்களை எடுத்துப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார், மற்ற அமைச்சர்கள் அவற்றில் தமக்கு பிடித்ததை எடுத்துக் கொள்ள போட்டி போட்டனர், ஆனால் அமைச்சர் அயாஸ் அதில் கவனம் செலுத்தாமல் மன்னரின் பின்னாலேயே சென்றார். உனக்கு வைரங்கள் தேவையில்லையா என கஜ்னவி கேட்க எனக்கு வைரக்குவியல்களின் சொந்தக் காரர் போதும் என்றாராராம் அயாஸ் ,
மிஷ்காத்தில் ஒரு ஹதீஸ் உண்டு,
ரபீ ஆ ரலி பெருமானாருக்கு ஒரு முறை ஓளு செய்ய தண்ணீர் எடுத்துக் கொடுத்தார்,
நபி (ஸல்) சொன்னார்கள்     سل يا ربيعة  என்றார்கள்,
ரபீஆ   (ரலி)  கேட்டார்,
أسئلك مرافقتك في الجنة
சிறப்பானதை அதிகமாக அடைந்து கொள்ள முயற்சி செய்வதே புத்திசாலிகளின் இயல்பு.
என்வே நோன்பை தொடராகவும் பரிசுத்தமாகவும் நிறைவேற்ற அதிகப்படியான கவனத்தை செலுத்துவோம்.
அது போல நிறைய வணக்கங்களை செய்வோம்.
தஹஜ்ஜுத் – தஸ்பீஹாத் திலாவத்
தர்மம் – இரக்கம் கருணை யை வெளிப்படுத்தி சக மனிதர்களுக்கு உதவியாக இருப்போம்.
(மற்ற உரைக்குறிப்புகளில் இதற்கான ஹதீஸ்கள் உண்டு)
பெருமானார் (ஸல் ) அவர்கள் அறிவுறுத்திய படி
فأروا الله تعالى من أنفسكم خيرا
அல்லாஹ்விடம் நமது ஆர்வத்தையையும் துடிப்பையும் வெளிப்படுத்துவோம். அல்லாஹ் கிருபை செய்வானாக!
அன்பான ஆலிம் பெருமக்கள் ரமலானில் தங்களுடைய துஆ வில் என்னையும் எனது குடும்பத்தாரையும் இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்,

تقبل الله منا صالح الأعمال ووفقنا لما يحب ويرضاه


No comments:

Post a Comment